caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 108

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:108

يَوْمَئِذٍ يَتَّبِعُونَ ٱلدَّاعِىَ لَا عِوَجَ لَهُۥ وَخَشَعَتِ ٱلْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. சப்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். நீர் (அங்கு பாதங்களின்) மென்மையான சப்தத்தைத் தவிர (வேறு சப்தத்தை) செவிமடுக்க மாட்டீர்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. இன்னும், சத்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். (அங்கு பாதங்களின்) மென்மையான (நடை) சத்தத்தை தவிர நீர் செவிமடுக்க மாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70