caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 69

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:69

قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று விவரிப்பான்" எனக் கூறினார்கள். நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு; அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது); அது பார்ப்பவர்களை மகிழ்விக்கும் என நிச்சயமாக அவன் கூறுகிறான் என (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharif(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று அவன் எங்களுக்கு விவரிப்பான்.” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு. அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது). பார்வையாளர்களை அது மகிழ்விக்கும்” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்'' என்றார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70