caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 67

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:67

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةً قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்" என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கவர்கள் மூஸாவே!) "எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா?" எனக் கூறினார்கள். "அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" எனக் கூறினார் (மூஸா).
Tamil Translation - Omar Sharifஇன்னும், “ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்” என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கு) அவர்கள், “(மூஸாவே!) நீர் எங்களை கேலியாக எடுத்துக் கொள்கிறீரா?” எனக் கூறினார்கள். “அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என அவர் கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. தவிர, ''ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) “நீர் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?'' என்றார்கள். (அதற்கு) ''நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றன்'' என்றார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70