وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளையை) மீறியவர்களையும் எனவே, "சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!" என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து கொண்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளைக்கு மாறு செய்து) எல்லை மீறியவர்களை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். ஆக, சிறுமைப்பட்டவர்களாக குரங்குகளாக ஆகிவிடுங்கள் என அவர்களுக்கு நாம் கூறினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி ''நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தே இருக்கிறீர்கள்.