قُلْنَا ٱهْبِطُوا۟ مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًى فَمَن تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வந்தால். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (பின்னர்) நாம் கூறினோம்:- “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.