caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 26

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:26

إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا يُضِلُّ بِهِۦ كَثِيرًا وَيَهْدِى بِهِۦ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆகவே, நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆகவே, நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன உதாரணத்தை நாடினான்? எனக் கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை வழிகெடுக்கிறான். இன்னும் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழி நடத்துகிறான். பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் வழிகெடுக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifகொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆக, நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆக, நிராகரிப்பாளர்கள் - அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் என்ன நாடினான்? என்று - (கேலியாக) கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை அவன் வழி தவற செய்கிறான். இன்னும், இதன் மூலம் அதிகமானோரை அவன் நேர்வழி நடத்துகிறான். இன்னும், பாவிகளைத் தவிர இதன் மூலம் அவன் வழி தவற செய்ய மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால், எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக்கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக்கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக்கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70