يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَٰعَةٌ وَٱلْكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இல்லை. நிராகரிப்பவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi254. நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.