وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் எவர்கள் மனைவிகளை விட்டுவிட்டு மரணிக்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை) வெளியேற்றாமல் பொருள் வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரணசாசனம் கூறவும். அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், (பிறகு) ஏதேனும் நல்லதைத் தங்களுக்குச் செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் எவர்கள் மரணிக்கிறார்களோ, இன்னும் மனைவிகளை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்கும் (அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான) பொருள்களை (-செலவுகளை) வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆக, அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi240. உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு' (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்டா(ல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவுடையவன் ஆவான்.