وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ فَحَسْبُهُۥ جَهَنَّمُ وَلَبِئْسَ ٱلْمِهَادُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்" என அவனுக்குக் கூறப்பட்டால், பெருமை அவனைப் பாவத்தைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. எனவே, அவனுக்கு நரகமே போதும். (அந்தத்) தங்குமிடம் திட்டமாக கெட்டுவிட்டது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’’ என அவனுக்குக் கூறப்பட்டால், (அவனது) கர்வம் அவனை (மேலும்) குற்றம் செய்ய தூண்டுகிறது. ஆகவே, அவனுக்கு (தண்டனையால்) நரகமே போதும். அது மிக கெட்ட தங்குமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi206. தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.