caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 19

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:19

أَوْ كَصَيِّبٍ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلْمَوْتِ وَٱللَّهُ مُحِيطٌۢ بِٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது வானத்திலிருந்து (பொழியும்) மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் வைக்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, (அவர்களின் உதாரணம்) வானத்திலிருந்து பொழியும் மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் ஆக்கிக் கொள்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். நிராகரிக்கும் இவர்களை அல்லாஹ் (எப்பொழுதும்) சூழ்ந்திருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70