caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 173

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:173

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களுக்குத் தடுத்ததெல்லாம் (தாமாக) செத்தது. இரத்தம், பன்றியின் மாமிசம், (அறுக்கும் போது) அல்லாஹ் அல்லாதவருக்காகப் பெயர் கூறப்பட்டவற்றைத்தான். ஆகவே, எவர் பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஅவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல என்று) தடுத்ததெல்லாம் (தாமாக) செத்த பிராணிகளும் இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கப்படும்போது) அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறப்பட்டதும்தான். ஆக, எவர் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்பதற்கு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது (அதிலிருந்து அவசியமான அளவு உண்பது) அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi173. (நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70