وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், "மாறாக, எங்கள் மூதாதைகளை எதன் மீது நாங்கள் பெற்றோமோ அதையே பின்பற்றுவோம்" எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “(நாங்கள் அதைப் பின்பற்ற மாட்டோம்.) மாறாக, நாங்கள் எங்கள் மூதாதைகளை எதில் (-எந்தக் கொள்கையில்) இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்கள்)?
Tamil Translation - Abdulhamid Baqawi170. மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “இல்லை, எவற்றின் மீது எங்கள் மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்து கொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)