caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 17

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:17

مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَٰتٍ لَّا يُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அல்லாஹ் அவர்களின் ஒளியைக் கொண்டு சென்றான். இன்னும் அவர்கள் (பார்க்கமுடியாத) இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.
Tamil Translation - Omar Sharifஅவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது, அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை போக்கிவிட்டான். இன்னும், அவன் அவர்களை இருள்களில் - அவர்கள் (எதையும்) பார்க்க முடியாதவர்களாக - விட்டுவிட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (அதாவது அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70