إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ أُو۟لَٰٓئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ ٱللَّهِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் நிராகரித்து, அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீதுதான் அல்லாஹ், வானவர்கள், மக்கள் (ஆகிய) அனைவரின் சாப(மு)ம் உண்டாகிறது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ் உடைய சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi161. எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்து விட்டு (அதை சீர்திருத்தாமல்) நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகட்டும்.