وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதைத்தான் முன்னோக்கக் கூடியவர். நன்மைகளில் (நீங்கள் ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதை முன்னோக்கக் கூடியவர் ஆவார். ஆக, நீங்கள் நன்மைகளில் (ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi148. (நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.