ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை அறிவார்கள். நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்தே உண்மையை மறைக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை (-மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் எல்லோருடைய கிப்லா என்பதை) அறிவார்கள். இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்த நிலையிலேயே (அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் கிப்லா என்ற) உண்மையை மறைக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi146. எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.