caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 14

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:14

وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ إِلَىٰ شَيَٰطِينِهِمْ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகிறார்கள். தங்கள் ஷைத்தான்களின் பக்கம் அவர்கள் தனித்தாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; நாங்களெல்லாம் (அவர்களை) பரிகசிப்பவர்கள்தான்" எனக் கூறுகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய மனித) ஷைத்தான்களிடம் சென்று (அவர்களுடன்) தனிமையில் இருந்தாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்களெல்லாம் (அவர்களை) கேலி செய்பவர்கள்தான்” என்று கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் “நாங்களும் (உங்களைப்போல்) நம்பிக்கை கொண்டு விட்டோம்'' எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்'' எனக் கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70