caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 13

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:13

وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓا۟ أَنُؤْمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"(நல்ல) மக்கள் நம்பிக்கை கொண்டது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? எனக் கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள். எனினும், (அதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70