caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 123

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:123

وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிகாரம் ஏற்கப்படாது; பரிந்துரை அதற்குப் பலனளிக்காது; அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது. இன்னும், அதனிடமிருந்து மீட்புத் தொகை (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. இன்னும், பரிந்துரை அதற்குப் பலனளிக்காது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi123. இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து ஒரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன்தராது. மேலும், அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70