caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 121

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:121

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ وَمَن يَكْفُرْ بِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓதுகிறார்கள். அவர்கள் அதை நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Abdulhamid Baqawi121. (நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70