جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدَ ٱلرَّحْمَٰنُ عِبَادَهُۥ بِٱلْغَيْبِ إِنَّهُۥ كَانَ وَعْدُهُۥ مَأْتِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவன் -அவனுடைய வாக்கு நிகழக்கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif(அவர்கள்) ‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனுடைய வாக்கு நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi61. அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.