إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்) திருந்தி நம்பிக்கை (ஈமான்) கொண்டு நல்லது செய்தவரைத் தவிர அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(எனினும்,) எவர்கள் (தொழுகையை விடுகின்ற குற்றத்திலிருந்து) திருந்தினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், நன்மையை செய்தார்களோ அவர்களைத் தவிர. அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், அவர்கள் அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.