قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எலும்பு என்னில் பலவீனமடைந்து விட்டது. தலை நரையால் வெளுத்து விட்டது. என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) நான் ஆகமாட்டேன்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான், எனக்குள் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. இன்னும், (என்) தலை நரையால் வெளுத்து விட்டது. (என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக, நிராசை அடைந்தவனாக) நான் (ஒருபோதும்) ஆகமாட்டேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)