وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதீர்ப்பு முடிவு செய்யப்படும்போது துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே! இறுதி) தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது (அந்த) துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் (மறதியில்) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.