أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَٰلٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நன்றாக செவிசாய்ப்பார்கள், நன்றாக பார்ப்பார்கள் அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில். எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில் நன்றாக செவிசாய்ப்பார்கள்; இன்னும், நன்றாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் செவியுறுவதும் பார்ப்பதும் அன்று அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.