قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابًا نُّكْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(துல் கர்னைன்) கூறினார்: ஆகவே, எவன் (இணைவைத்தும் என் கட்டளையை மீறியும்) அநியாயம் செய்தானோ அவனை வேதனை செய்வோம். பிறகு, அவன் தன் இறைவனிடம் திருப்பப்படுவான். அவன் அவனை கொடிய வேதனையில் வேதனை செய்வான்.
Tamil Translation - Omar Sharif(துல் கர்னைன்) கூறினார்: ஆக, எவன் (இணைவைத்து வணங்கியும் என் கட்டளையை மீறியும்) அநியாயம் செய்தானோ அவனை தண்டிப்போம். பிறகு, அவன் தன் இறைவனிடம் மீண்டும் கொண்டு வரப்படுவான். அவன் கொடிய தண்டனையால் அவனை தண்டிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்.