caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 86

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:86

حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغْرِبَ ٱلشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِى عَيْنٍ حَمِئَةٍ وَوَجَدَ عِندَهَا قَوْمًا قُلْنَا يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் மறைவதாக அதைக் கண்டார். அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். (நாம் அவரை நோக்கி) “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்வீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது (கரு நிற) சேறுகள் நிறைந்த கடலில் மறைவதாக அதைக் கண்டார். இன்னும், அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத்) தண்டிப்பீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து அவர்களை மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi86. சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70