فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாது அதை) அவ்விருவரும் கடந்த போது (மூஸா) தன் வாலிபரை நோக்கி “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் களைப்பைச் சந்தித்தோம்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, (தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாமல் அதை) அவ்விருவரும் கடந்து சென்றபோது (மூஸா) தன் வாலிபரை நோக்கி, “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் (அதிக) களைப்பைச் சந்தித்தோம்” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. (தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்.