وَعُرِضُوا۟ عَلَىٰ رَبِّكَ صَفًّا لَّقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَٰكُمْ أَوَّلَ مَرَّةٍۭ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் இறைவன் முன் வரிசையாக சமர்ப்பிக்கப்படுவார்கள். (அவன் கூறுவான்,) “நாம் உங்களை முதல்முறைப் படைத்தவாறே (இப்போது) எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாறாக, உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரத்தை ஆக்கவே மாட்டோம் என்று (உலகில் வாழும்போது) பிதற்றினீர்கள்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், உம் இறைவன் முன், வரிசையாக (எல்லோரும்) சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது அவன் கூறுவான்:) “நாம் உங்களை (தாயின் வயிற்றிலிருந்து) முதல் முறைப் படைத்தது போன்றே (இப்போது) எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாறாக, (உங்களை உயிர்ப்பிப்பதற்கு) வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் (உலகில் வாழும்போது) பிதற்றினீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi48. உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்).