caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:47

وَيَوْمَ نُسَيِّرُ ٱلْجِبَالَ وَتَرَى ٱلْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மலைகளை நாம் பெயர்த்துவிடும் நாளில் (நிகழ்பவற்றை நினைவு கூருவீராக! அப்போது,) பூமியை (அதில் உள்ள அனைத்தையும் விட்டு நீங்கி) வெளிப்பட்டதாக பார்ப்பீர். இன்னும் அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விடமாட்டோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகளை (அவற்றின் இடங்களிலிருந்து) நாம் பெயர்த்துவிடுகின்ற நாளை நினைவு கூர்வீராக! இன்னும், பூமியை - (அதுவோ அதில் உள்ள அனைத்தையும் விட்டு நீங்கி, செடி கொடிகள், மேடு பள்ளம்) எதுவுமின்றி தெளிவாக சமதளமாக பார்ப்பீர். இன்னும், (அந்த மறுமை நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவோம். ஆக, அவர்களில் ஒருவரையும் (எழுப்பாமல்) விடமாட்டோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70