caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:46

ٱلْمَالُ وَٱلْبَنُونَ زِينَةُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். என்றும் நிலையாக இருக்கும் நற்செயல்கள் உம் இறைவனிடம் நன்மையிலும் சிறந்தவை, ஆசையிலும் சிறந்தவை.
Tamil Translation - Omar Sharifசெல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். ஆனால், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உம் இறைவனிடம் (உங்களுக்கு) நன்மையாலும் சிறந்தவை; இன்னும், ஆசையாலும் சிறந்தவையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. (ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70