caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 45

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:45

وَٱضْرِبْ لَهُم مَّثَلَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ ٱلرِّيَٰحُ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ مُّقْتَدِرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மையை விவரிப்பீராக! மழை நீர் அதை வானத்திலிருந்து நாம் இறக்க பூமியின் தாவரம் அதனுடன் கலந்து (வளர்ந்தது. பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது ஆகிவிட்டது. இது போன்றுதான் (இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) அவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மை மழை நீரைப் போன்றது என்று விவரிப்பீராக! (அதாவது,) அதை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். பூமியின் தாவரம் அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது மாறி விட்டது. (இது போன்றுதான் இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) மேலும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. (நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70