أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمْسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيْلِ وَقُرْءَانَ ٱلْفَجْرِ إِنَّ قُرْءَانَ ٱلْفَجْرِ كَانَ مَشْهُودًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) சூரியன் சாய்ந்த திலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharif(நபியே!) சூரியன் (வானத்தின் நடுவிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக ஃபஜ்ர் உடைய தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.