يَوْمَ نَدْعُوا۟ كُلَّ أُنَاسٍۭ بِإِمَٰمِهِمْ فَمَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُو۟لَٰٓئِكَ يَقْرَءُونَ كِتَٰبَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர்கள் தமது புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அத்தகையவர்கள் தங்கள் புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர் தமது (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்படுவாரோ அ(த்தகைய)வர்கள் தமது புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். மேலும், ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.