caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 70

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:70

وَلَقَدْ كَرَّمْنَا بَنِىٓ ءَادَمَ وَحَمَلْنَٰهُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை நாம் கண்ணியப்படுத்தினோம். கரையி(ல் பல விதமான வாகனங்களி)லும் கடலி(ல் கப்பலி)லும் நாம் அவர்களை வாகனிக்கச் செய்தோம். நல்லவற்றிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். நாம் படைத்த அதிகமான (படைப்புகள் பல)வற்றை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை (-மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கரையிலும் கடலிலும் அவர்கள் வாகனித்து செல்லும்படி நாம் செய்தோம். இன்னும், நல்ல உணவுகளிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். இன்னும், நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70