caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 69

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:69

أَمْ أَمِنتُمْ أَن يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَىٰ فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ ٱلرِّيحِ فَيُغْرِقَكُم بِمَا كَفَرْتُمْ ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ عَلَيْنَا بِهِۦ تَبِيعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது மற்றொரு முறை உங்களை அவன் அதில் மீட்டு (கொண்டு வந்து) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதற்காக உங்களுக்கு நம்மிடம் பழிதீர்ப்பவரை காணமாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, மற்றொரு முறை உங்களை அவன் அதில் (-கடலில்) மீண்டும் அழைத்து சென்று, (கப்பலை) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதனை முன்னிட்டு உங்களுக்காக நம்மிடம் பழிதீர்ப்பவரை நீங்கள் காணமாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70