قَالَ أَرَءَيْتَكَ هَٰذَا ٱلَّذِى كَرَّمْتَ عَلَىَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என்னை விட நீ கண்ணியப் படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக?” (என்று ஏளனமாக கூறி) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். (ஆனால் நீ அருள்புரியும்) குறைவானவர்களைத் தவிர” என்று (இப்லீஸ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif(இப்லீஸ்) கூறினான்: “என்னை விட நீ கண்ணியப்படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக?” (என்று ஏளனம் செய்துவிட்டு கூறினான்:) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். ஆனால், (நீ அருள் புரியும்) குறைவானவர்களைத் தவிர”
Tamil Translation - Abdulhamid Baqawi62. (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.