caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:51

أَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِى صُدُورِكُمْ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَا قُلِ ٱلَّذِى فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ قُلْ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக உள்ளவற்றில் ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீட்பார்?” என்று அவர்கள் கூறட்டும். (அப்போது நபியே!) கூறுவீராக! “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீட்பான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது எப்போது (வரும்)?” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஅல்லது, உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக தோன்றுகின்ற (வேறு) ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். (அதுவும் உங்களால் முடியாது.) ஆக, “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீண்டும் உருவாக்குவார்?” என்று அவர்கள் (கேலியாக) கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீண்டும் உருவாக்குவான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது (-மறுமை) எப்போது (வரும்)?” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi51. அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70