نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰٓ إِذْ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உமக்கு செவிமடுக்கும்போது எதற்காக செவிமடுக்கின்றனர் என்பதையும் இன்னும் அவர்கள் தனித்து பேசுபவர்களாக இருக்கும் போது(ம்), “உண்ணவும் குடிக்கவும் செய்கின்ற மனித இனத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரைத் தவிர (உயர்ந்த ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள் கூறும் போது(ம் அவர்கள் கூறுவதை) நாம் மிக அறிந்தவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உம்மிடம் (இந்த குர்ஆனை) செவியுறும்போது எதற்காக அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதையும்; இன்னும், அவர்கள் தனித்து பேசும்போதும், “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்வான ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அந்த அநியாயக்காரர்கள் கூறும் போதும் அவர்கள் கூறுவதை நாம் மிக அறிந்தவர்களாக இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).