caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:46

وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى ٱلْقُرْءَانِ وَحْدَهُۥ وَلَّوْا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِمْ نُفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் கனத்தையும் (செவிட்டு தனத்தையும்) ஆக்கிவிடுவோம். குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்புகின்றனர் (வெருண்டு ஓடி விடுகின்றனர்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டு தனத்தையும் ஆக்கிவிடுவோம். மேலும், (நபியே!) குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் (புகழ்ந்து துதித்து) நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்பி (ஓடி) விடுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70