caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:2

وَءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَجَعَلْنَٰهُ هُدًى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُوا۟ مِن دُونِى وَكِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். மேலும், “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்கள் தேவைகளுக்கு நீங்கள் பிரார்த்திக்கின்ற) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டக் கூடியதாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70