caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سُبْحَٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَٰتِنَآ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுனிதமான மஸ்ஜிதிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை (முஹம்மது நபி)க்கு தன் அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) காண்பிப்பதற்காக அவரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ம் மஸ்ஜி)தைச் சுற்றி அருள்வளம் புரிந்தோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மத் நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70