وَكُلَّ إِنسَٰنٍ أَلْزَمْنَٰهُ طَٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ كِتَٰبًا يَلْقَىٰهُ مَنشُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லா மனிதனுக்கும் அவனுடைய செய(ல்கள் பதிவு செய்யப்படும் ஓர் ஓ)லை(யை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய செயல்களை (நாம் பதிவு செய்கின்ற ஓர் பதிவேட்டை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். இன்னும், அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்.