caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 96

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:96

مَا عِندَكُمْ يَنفَدُ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٍ وَلَنَجْزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓا۟ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவை நிரந்தரமானவை. பொறுத்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மிக அழகிய முறையில் நிச்சயம் கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஉங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும். அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ நிரந்தரமானவையாகும். மேலும், (உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) பொறுமையாக(வும் உறுதியாகவும்) இருந்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi96. உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70