مَنْ عَمِلَ صَٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُۥ حَيَوٰةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆண் அல்லது பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நல்லதை செய்வாரோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மிக அழகிய முறையில் அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.