وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشْرَكُوا۟ شُرَكَآءَهُمْ قَالُوا۟ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدْعُوا۟ مِن دُونِكَ فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ إِنَّكُمْ لَكَٰذِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇணைவைத்தவர்கள் தங்கள் இணை தெய்வங்களை (மறுமையில்) கண்(டு கொண்)டால் (அல்லாஹ்வை நோக்கி) “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்” என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடுவர்.
Tamil Translation - Omar Sharifஇணைவைத்தவர்கள் (அல்லாஹ்விற்கு இணை வைத்து வணங்கிய) தங்களுடைய (கற்பனை) தெய்வங்களை (மறுமையில்) பார்த்தால் (அல்லாஹ்வை நோக்கி), “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்” என்று கூறுவார்கள். ஆனால், அவைகளோ இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi86. இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்.