وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) வேதனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (வேதனை) இலகுவாக்கப்படாது. இன்னும் அவர்கள் (வேதனையை பிற்படுத்தி) அவகாசமும் அளிக்கப் படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifதீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) தண்டனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (தண்டனை) இலகுவாக்கப்படாது. இன்னும், அவர்கள் (சிறிது நேரம் தண்டனை இன்றி இருக்க) அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது.