caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 84

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:84

وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا۟ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் ஒவ்வொரு சமுதாய த்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசவும்) அனுமதிக்கப்படாது. அவர்கள் (அதற்கு) காரண(மு)ம் கேட்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (எதுவும் பேச) அனுமதிக்கப்படாது. இன்னும், அவர்கள் (தங்கள் பாவங்களுக்கு) சாக்குபோக்கு சொல்ல (-மன்னிப்பு கேட்க) வைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70