وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ شَيْـًٔا وَلَا يَسْتَطِيعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெறாத, இன்னும் (அதற்கு அறவே) ஆற்றல் பெறாத (சிலைகள், இறந்தவர்கள், ஏனைய படைப்புகள் போன்ற)வர்களைத்தான் இவர்கள் வணங்குகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இவர்கள் அல்லாஹ்வை அன்றி எவற்றை வணங்குகிறார்கள் என்றால் அவை இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெற மாட்டார்கள். இன்னும், அவை (அதற்கு அறவே) ஆற்றல் பெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் அற்றவை; ஆற்றலும் அற்றவை.