وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதையூட்டக்கூடிய (மது போன்ற)தையும், நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதை தரக்கூடிய பானத்தையும்,[1] நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi67. பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.